செவ்வாய் கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான். வணங்கிப்பாருங்கள். அப்போது அந்த உண்மை விளங்கும்.

Keerthi
2 years ago
செவ்வாய் கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான். வணங்கிப்பாருங்கள். அப்போது அந்த உண்மை விளங்கும்.

செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமானுக்கும் துர்க்கை அம்பாளுக்கு உகந்த நாள். 
முருகப்பெருமானை வழிபடுவதற்கு 3 விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
•    வார விரதம்
•    நட்சத்திர விரதம்
•    திதி விரதம்

• வார விரதம் என்பது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடிக்கும் விரதம் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டியவர்கள் யார் என்றால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உள்ளவர்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் சிறந்த நற்பலன்களை அடையலாம். 

• தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் செவ்வாய் தோஷத்தில் இருந்து முழுமையாக விடுபடலாம். 

• நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் (karthigai natchathiram) கடைபிடிக்கக் கூடிய விரதமாகும். 

• திதி விரதம் என்பது சஷ்டி திதியில் கடைப்பிடிக்கக் கூடிய விரதம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரம் மாலை வேலையில் சரியாக (3pm to 4.30pm) துர்க்கை அம்மனுக்கு உகந்த செவ்வரளி மலர்களை இட்டு, எலுமிச்சை பலத்தால் விளக்கேற்றி வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கும் மற்றும் நவகிரகத்தினால் ஏற்படும் தோஷங்களும் அகலும்