காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் Valentine டூடுளை வெளியிட்ட Google

Prasu
2 years ago
 காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் Valentine டூடுளை வெளியிட்ட Google

சாதி, மதம், மொழி, இனம், நாடு என அனைத்தையும் கடந்ததுதான் காதல். இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்பை, காதலை தங்களது மனம் கவர்ந்தவர்களுடன் கொண்டாடி வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஒருவொருக்கு ஒருவர் அன்பை பரஸ்பரமாக பரிமாறிக் கொள்ளும் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் ஸ்பெஷலாக டூடுல் போட்டு கொண்டாடி வருகிறது கூகுள். 

இந்த டூடுல் 2டி கேம் (விளையாட்டு) போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்ததும் இரண்டு வெள்ளை எலிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அடுத்த சில நொடிகளில் இரண்டு எலிகளும் தனித்தனியே இருக்கின்றன. அந்த இரண்டையும் ஒன்றாக சேர்ப்பதுதான் பயனர்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க். 

‘GOOGLE’-இல் இடம்பெற்றுள்ள ‘O,G மற்றும் L’ ஆகிய மூன்று எழுத்துக்கள் தனித்தனியாக உள்ளன. அதை சேர்த்தால் அந்த எலிகளையும் ஒன்றாக சேர்த்து விடலாம். இரண்டும் சேர்த்த பிறகு ‘Happy Valentine’s Day’ என்ற வாழ்த்தை சொல்கின்றன. அந்த எலிகளை சேர்த்து வைக்க கூகுள் பயனர்கள் விளையாடி வருகின்றனர். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!