இளம் வயதிலேயே திருமணமா..? உடனே சம்மதம் சொல்லுங்க.. ஏன் தெரியுமா..?
இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மீது அதிக பொறுப்பு சுமத்தப்படுவதால் அவர்கள் திருமண வாழ்க்கையை 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் தொடங்குகின்றனர். கல்வி, பொருளாதாரம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் லட்சியம் ஆகியவை காரணமாக ஒவ்வொரு நபருக்கும் திருமணம் வயது மாறுபடுகிறது.
இருப்பினும் வயது மூப்பு பெற்ற நபர்கள் சந்திக்கும் சிக்கல்களை விட இளம் வயதில் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. சமீபத்திய தரவுகளின் படி இந்திய ஆண்கள் பெரும்பாலும் 26 வயதிலும், பெண்கள் 22 வயதிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இளம் வயதில் திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
இளம் வயதிலேயே ஒருவர் திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதில்லை. மேலும், பல்வேறு காரணங்களுக்காக சரியான நேரம் வரும் வரை காத்திருப்பார்கள். உண்மையை சொன்னால் 30 அல்லது 35 வயதில் உங்களுக்கு திருமண வாழ்க்கையை பற்றிய சிறந்த அணுகுமுறை இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் இளம் வயதில் உங்களுக்கு பிடித்த ஒரு சிறந்த துணையை நீங்கள் கண்டால், சிறிதும் தயங்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
இந்த காலக்கட்டத்தில் நீங்களும் உங்கள் துணையும் இளமைத்துடிப்புடன் இருப்பீர்கள். எனவே நீங்கள் ஒரே திசையில் முன்னேறவும், இலக்கை அடையவும் முடியும்.
நீங்கள் இளம் வயதில் திருமணம் செய்துகொண்டால் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்பினால் நீங்கள் இளம் பெற்றோர்களாக இருப்பீர்கள். மேலும் நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தையும் பெற முடியும். கூடுதலாக, குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும் போது, நீங்கள் இன்னும் 40 வயதில் மட்டுமே இருப்பீர்கள். இது மற்ற பெற்றோரர்களை போல அல்லாமல் புதிய சாகசங்களைத் தொடங்குவதற்கு போதுமான இளமையை கொண்டிருப்பீர்கள்.
22 முதல் 27 வயதில் திருமணம் செய்துகொள்பவர்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் அனுபவிக்கலாம். உங்கள் துணையுடன் வாழ்க்கையை மிகவும் சந்தோசஷமாக அனுபவிக்கலாம். பல்வேறு பகுதிகளுக்கு உங்கள் துணையுடன் அடிக்கடி வெளியே செல்வதால் ஒரு நல்ல புரிதல் இருவருக்குள்ளும் உருவாகும்.
இளம் வயதில் திருமணம் செய்பவர்கள் அதிக பொறுப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் வாழ்க்கையிலும் சரி, தொழில் சார்ந்த பணிகளிலும் சரி உங்கள் பொறுப்பான திறன் அதிகம் வெளிப்படும்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களின் ஹனிமூன், வெகேஷன்ஸ் என அவர்களின் வாழ்க்கை நடைமுறை அனைத்தும் வேடிக்கையாக இருக்கும். ஒரே வயதில் இருப்பதால் நீங்கள் ஒன்றாக இணைந்து ட்ரெக்கிங் போகலாம். இருவருக்கும் இடையில் நல்ல காதல் மலர அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் மிகவும் வேடிக்கை நிறைந்த பெற்றோராக இருப்பதால் உங்கள் குழந்தை அதிர்ஷடசாலியாக இருப்பார். ஏனெனில் 30 வயதிற்கு மேல் உள்ள பெற்றோர்களை காட்டிலும் இளம் வயது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வேடிக்கையாக இருப்பார்கள்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்குவது இளம் வயது தம்பதியினருக்கு ஒரு சுமையாக இருக்காது.
30 வயதிற்கு மேல் திருமணம் செய்பவர்களை ஒப்பிடும்போது இளம் வயதில் திருமணம் செய்பவர்கள் தயங்காமல் எந்த விஷயங்களிலும் ஈடுபடலாம்.இருவரும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடனும், புரிந்துணர்வுடனும் இருக்கலாம்.