மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை உயிரிழப்பு

Prasu
2 years ago
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், டாமோ மாவட்டம், பார்கேரா பெஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா ஆத்யா. இவர் தனது நிலத்தில்  உள்ள ஆழ்துளை கிணற்றில் (30 அடி) தண்ணீர் இல்லாததால் அதை பயன்படுத்தாமல் வைத்திருந்தார். அதேசமயம், அது மூடப்படாமல் திறந்தே கிடந்துள்ளது. இன்று பிற்பகல் அவரது மூன்று வயது குழந்தை பிரின்ஸ் ஆத்யா, விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். 

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேர முயற்சிக்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் குழந்தை மூச்சுத் திணறலால் இறந்துவிட்டதாக மருத்துவ அலுவலர் கூறினார்.

இதேபோல் கடந்த வியாழக்கிழமையன்று உமாரியா மாவட்டம் பாதர்சாத் கிராமத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!