ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா வெளியிட்ட தகவல்

Keerthi
2 years ago
ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா வெளியிட்ட தகவல்

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  

இந்த சிறப்பு கூட்டத்தில் இந்திய தரப்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:

பெலாரஸ் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த இரு தரப்பினரும்(ரஷியா-உக்ரைன்) அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

போரினால் ஏற்படும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், அனைத்துப் பகைமைகளுக்கும் இரு நாடுகளும் முடிவு கட்ட வேண்டும் என்ற எங்களின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

ரஷியா மற்றும் உக்ரைன் தலைவர்களுடனான தனது சமீபத்திய உரையாடல்களின் போதும் இந்திய பிரதமர் மோடி  இதை வலுவாக ஆதரித்துள்ளார். 

பேச்சுவார்த்தைக்கு திரும்பவும் அமைதி முயற்சிகளுக்கும் எந்த வகையிலும் பங்களிப்பு செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. 

உக்ரைனில் இன்னும் சிக்கித் தவிக்கும் ஏராளமான இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்ற நாங்கள் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.