உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்கள் திடீர் முடக்கம் - காரணம் இதுதான்

#Ukraine
Prasu
2 years ago
உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்கள் திடீர் முடக்கம் - காரணம் இதுதான்

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து உள்ளது ரஷ்யா. அண்மைய தகவல்களின் படி ரஷ்யாவின் அணு ஆயுதப்படை தரை, நீர், ஆகாயம் என மும்முனை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்களை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனம். 

உக்ரைன் நாட்டின் வீதிகள், அங்காடிகள், உணவகங்கள் மாதிரியானவற்றின் கூகுள் மேப் லைவ் டிராஃபிக் குறித்த விவரங்களை வெளிக்காட்டும் தரவு சார்ந்த டூல் தற்காலிகமாக உலக அளவில் முடக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி உள்ளூர் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இதனை முன்னெடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் மக்கள் என சுமார் 4 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு உக்ரைன் - ரஷ்ய எல்லையில் இருந்த நடமாட்டத்தை தான் கவனித்து இருந்ததாகவும். அதன் பிறகே ரஷ்யா, உக்ரைன் மீது தாக்கியதாகவும். அது ரஷ்ய படைகளாக இருந்திருக்கலாம் என்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். இப்படியாக உலகம் முழுவதும் உள்ள கூகுள் பயனர்கள் கூகுள் மேப் துணைகொண்டு உக்ரைன் நாட்டு நகர்வுகளை கவனித்து வந்த நிலையில் அது தற்போது முடக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!