தமிழ்நாட்டில் அதிகனமழைக்கு வாய்ப்பு.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்

#India #Tamil Nadu #weather
தமிழ்நாட்டில் அதிகனமழைக்கு வாய்ப்பு.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (4-ம் தேதி) அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 4-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பான வானிலை மையத்தின் அறிவிப்பில், இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றபின் இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.