பங்குச் சந்தை முதலீட்டில் கடும் நஷ்டம்: மதுரை தம்பதியர் எடுத்த விபரீத முடிவு
பங்குச் சந்தை முதலீட்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் மதுரை தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை மாநகர் பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் - லாவண்யா தம்பதியர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், நாகராஜன் பங்குச் சந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்துள்ளார்.
பங்குச் சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், திடீரென பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இவரின் முதலீட்டில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜன் தனது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனது மனைவி லாவண்யாவுடன் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து நள்ளிரவு வரை கதவு திறக்காத நிலையில், அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் நேரில் சென்று பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய தெப்பக்குளம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.