ஆர்யாவிற்கு கிடைத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்..
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பெருமைக்குரியவர் ரஜினிகாந்த். இவரின் மீது தீராத பற்று கொண்ட இவரின் ரசிகர்கள் இவரை தலைவர் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இவருக்குப் பிறகு அந்த இடத்தை பிடிப்பதற்கு சிம்பு, விஜய், அஜித் என்று பல போட்டிகள் நிலவியது. ஆனால் இன்று வரை அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும்தான் அது ரஜினிகாந்த் தான் என்று ஒதுங்கி விட்டனர்.
தற்போது நடிகர் ஆர்யாவை ஓடிடி தளத்தின் சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. சமீபத்தில் ஆர்யாவின் நடிப்பில் சார்பட்டா பரம்பரை, டெடி போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது.
இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் ஆர்யா ஓடிடி தளத்தில் ஒரு வெற்றி நடிகராக வலம் வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஓடிடி தளங்களும் ஆர்யாவின் திரைப்படங்களை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.
அவரின் படங்களுக்கு இங்கு மவுசு அதிகமாக இருப்பதால் நல்ல லாபமும் அவர்களால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஆர்யா புதிதாக நடிக்கப் போகும் ஒரு திரைப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கிறது இந்த திரைப்படமும் ஓடிடியில்தான் வெளியாக இருக்கிறது.
இதனால்தான் தற்போது ஆர்யா போட்டியின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டு வருகிறார். அவரை இப்படி சூப்பர் ஸ்டார் என்று எல்லோரும் புகழ்வதால் ரஜினியின் ரசிகர்கள் தற்போது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.