இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள இசையமைப்பாளர் டி.இமான்

Keerthi
2 years ago
 இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள இசையமைப்பாளர் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம். அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார், எப்போது திருமணம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழில் உடன் பிறப்பே, அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கேப்டன், யுத்த சத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம், பப்ளிக் ஆகிய படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். தான் இசையமைத்த பல பாடல்களை இவரே பாடி உள்ளார். கடைசியாக அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஹிட் பாடலான அடிச்சுதூக்கு பாடலை பாடினார்.

டி.இமான், 2008 ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிகா என்பவரை 2008 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வெரோனிகா டோரத்தி இமான், பிலேசியா காத்தி இமான் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த தகவலை இமான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஷியல் மீடியாவில் அறிவித்தார்.

இருவரும் மனம் ஒத்து பிரிவதாக முடிவெடுத்து, சட்டப்படி விவாகரத்து பெற்றதாக இமான் குறிப்பிட்டிருந்தார். தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இமான் கேட்டுக் கொண்டார். தன்னை புரிந்து கொண்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின்படி, இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறாராம். சென்னையை சேர்ந்த உமா என்பவரை தான் இமான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம். இது வீட்டில் பார்த்து நடத்தி வைக்கப்படும் திருமணமாம். இவர்களின் திருமணம் மே மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இமான் மற்றும் உமா குடும்பத்தை சேர்ந்தோர் கலந்து பேசிய பிறகு, இது பற்றி முடிவு செய்ய போகிறார்களாம். விரைவில் இமான் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!