இரண்டு நடிகைகளுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி..

Prabha Praneetha
2 years ago
இரண்டு நடிகைகளுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு பூமி படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றி பெறவில்லை.

இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து ஜெயம் ரவியின் 28 வது படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்க உள்ளார்.

இதற்கு முன்னதாக ஜெயம் ரவியின் பூலோகம் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஜெயம் ரவியின் 28வது படத்திற்கு அகிலன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

அகிலன் படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம்80கள் மற்றும் நிகழ்காலம் என இரண்டு கால கட்டங்களில் நடக்கும் விதமாக படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 80களில் தன்யா ரவிச்சந்திரன், தற்போது நிகழ்காலத்தில் உள்ள கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.

இதனால் அகிலன் படத்தில் ஜெயம் ரவி 70 கிட்ஸ் கேரக்டர் ஆகவும் மற்றும் 90 கிட்ஸ் கேரக்டர் ஆகவும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ரசிகர்கள் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்தாலும் படம் ஹிட் ஆகவில்லை. அண்ணன் தயவால் இதுவரை சினிமாவில் நிலைத்து நின்றார். இப்பொழுது மிகவும் கஷ்டப்படுகிறார்.

இந்நிலையில் அகிலன் படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அகிலன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!