சம்பளத்தில் நயன்தாராவை ஓரம்கட்ட வரும் நடிகை..

Prabha Praneetha
2 years ago
சம்பளத்தில் நயன்தாராவை ஓரம்கட்ட வரும் நடிகை..

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தவர் நயன்தாரா.

இவர் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா 3 கோடி சம்பளம் பெற்று வந்தார். இந்நிலையில் சில வெற்றி படங்கள் தொடர்ந்து கொடுக்க தற்போது அவருடைய சம்பளம் 5 கோடியாக உள்ளது.

நயன்தாராவுக்கு அடுத்தபடியாக உள்ள சில நடிகைகள் 2 கோடி வரை சம்பளம் பெற்றார்கள். இப்போது நயன்தாராவுக்கு அடுத்து அதிகம் சம்பளம் வாங்குகிறார் நடிகை சமந்தா.

சமந்தா கடந்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

சமந்தா சமீபகாலமாக கமர்ஷியல் மற்றும் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக சமந்தா அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா ஒன்றரை கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமந்தா தற்போது தமிழில் காற்றுவாக்கில் 2 காதல் மற்றும் தெலுங்கில் சகுந்தலா படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது யசோதா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக சமந்தாவுக்கு 3 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இதனால் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தை சமந்தா பிடித்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இரண்டு இடத்தை பிடித்த நயன்தாரா மற்றும் சமந்தா இருவருமே நடித்துள்ளனர்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காத்துவாக்குல 2 காதல் படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக சமந்தா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

கூடிய சீக்கிரத்தில் சம்பளத்தை தாண்டி சமந்தா நம்பர் 1 நடிகையாக வலம் வர அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!