சிவகார்த்திகேயன், ஸ்டாலினுக்கும் இப்படி ஒரு உறவா.?
தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்க இருக்கிறார்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
தமிழில் ஒரு பாடகராக, நடிகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக என்று பன்முகத் திறமை கொண்டு விளங்கும் இவரின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
அதாவது திருவிலிமிழலை என்பதுதான் சிவகார்த்திகேயனின் பூர்விக ஊர்.
அங்கு மிகப்பெரும் நாதஸ்வர கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவர்களின் கொள்ளுப்பேரன் தான் சிவகார்த்திகேயன்.
அதுமட்டுமில்லாமல் இவரின் தாத்தாக்கள் கோவிந்தராஜ பிள்ளை, தட்சிணா மூர்த்தி பிள்ளை ஆகியோர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர்கள்.
அதேபோன்று திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தான் கலைஞர் மு கருணாநிதி குடும்பத்தினர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் கலைஞர் குடும்பத்தினர் இந்த நாதஸ்வர கலைஞர்களின் வழி வந்தவர்கள்.
இதை வைத்து பார்க்கும் போது முதல்வர் குடும்பத்தினருக்கும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவு முறை இருக்கிறது.
சமீபத்தில்கூட சிவகார்த்திகேயன் அவரின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் அவர் அங்கு இருக்கும் ரசிகர்களிடமும் கலந்துரையாடியுள்ளார். அப்போது தான் பலருக்கும் சிவகார்த்திகேயன் நாதஸ்வர கலைஞர் வழி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடைய முன்னோர்களைப் பற்றிய தகவலும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.