நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பிரவுசரில் சர்ச் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி? - புதிய 'அப்டேட்'
இணையத்தளத்தில் எதற்குமே பாதுகாப்பு என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இதில் பயனர்களுக்கு ரிஸ்க் என்பது ரொம்பவே அதிகம் என சொல்லப்படுகிறது. இணையத்தின் இயக்கமின்றி உலகத்தின் இயக்கமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் பலரது தனிப்பட்ட தரவுகள் கசிவது குறித்த செய்திகள் வருகின்றன. பிரைவசி அச்சுறுத்தல் என்பது இப்போது வழக்கமாகிவிட்டது.
இருந்தாலும் ஆன்லைன் பாதுகாப்புக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் முதலாவதாக ஒவ்வொரு இணையதள பயனர்களும் தங்களது பிரவுசர்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டுமென சொல்லப்படுகிறது. அதாவது பெரும்பாலான வெப் பிரவுசர்கள் நீண்ட நாட்களாக செக் செய்யப்படாத தகவல்களை ஹோல்ட் செய்து வைக்கின்றன. அதனால் லாக்-இன் சிக்கல் மற்றும் வேறு சில தளங்களை அக்செஸ் செய்வதில் சிக்கல் உருவாகலாம் என சொல்லப்படுகிறது
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர்களில் ஒன்று கூகுள்.
அந்த பிரவுசரில் பயனர்கள் தேடும் அனைத்தும் அதன் சர்வரில் சேமிக்கப்படுவதாக தகவல். பயனர்கள் தேடுகின்ற தரவுகளின் அடிப்படையில் கூகுள் விளம்பரம் கூட செய்து வருகிறது. மேலும் அந்த தரவுகளை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களும் எழுகின்றன.
அதனால் அவ்வப்போது அதனை டெலீட் செய்வது அவசியம் என சொல்லப்படுகிறது. அதாவது சர்ச் ஹிஸ்டரி (Search History), கேச் (Cache) ஹிஸ்டரி மற்றும் குக்கீகளை கிளியர் செய்வதும் அவசியம் என சொல்லப்படுகிறது.