பள்ளி பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை - கர்நாடக அரசு ஆலோசனை

#Cinema #Actor #history
Prasu
2 years ago
பள்ளி பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை - கர்நாடக அரசு ஆலோசனை

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமார் சினிமாவை தாண்டி பல ஏழைகளுக்கு உதவிகள் செய்ததோடு 119 கோசாலைகள் 16 முதியோர் இல்லங்களை நடத்தி வந்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய 4 ஆயிரத்து 800 மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி உதவியும் செய்து வந்தார். தனது சம்பளத்தில் பெரும் பகுதியை சமூக சேவை பணிகளுக்கு செலவிட்டு உள்ளார்.

புனித் ராஜ்குமாரின் திரை வாழ்க்கை மற்றும் சமூகசேவை குணத்தை பெருமைப்படுத்தும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக கர்நாடக கல்வி மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்து உள்ளார். 4 அல்லது 5-ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை பற்றிய அத்தியாயம் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!