வாட்ஸ்-அப்பில் இனி பயனர்கள் 2ஜிபி வரை ஃபைல்களை அனுப்பலாம்! விரைவில் அறிமுகம்?
இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு.
இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பவுதுண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரை அளவுள்ள ஃபைல்களை பயனர்கள் அனுப்பும் வசதியை வாட்ஸ்-அப்பில் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான சோதனை வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறதாம். இருந்தாலும் முதற்கட்டமாக இந்த வசதியை ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. அதற்கு பிறகே ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகும் அதனை பயன்படுத்த முடியும். இருந்தாலும் அது குறித்த அறிவுப்பு உறுதியாக அறிவிக்கப்படவில்லை.