ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 29: உன்னதமான உணவு டெலிவரி சேவையை துவக்கிய ஜாஸ்மின் குரோ!

#technology #Article #today
ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 29: உன்னதமான உணவு டெலிவரி சேவையை துவக்கிய ஜாஸ்மின் குரோ!

ஜாஸ்மின் குரோ (Jasmine Crowe) பசியுடன் இருப்பவர்களுக்கு உணவுகிடைக்க வழி செய்திருக்கிறார். அதே நேரத்தில் உணவு பொருட்கள் வீணாவதை தடுக்கவும் வழி செய்திருக்கிறார். இந்த இரண்டையும் இணைக்கும் உன்னதமான உணவு டெலிவரி சேவையை சாத்தியமாக்கும் குட்அர் (Goodr) நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்.

பெரும்பாலும் லாபமே பிரதானமாக கருதப்படும் வர்த்தக உலகில் ஜாஸ்மின், சமூக நோக்கிலான சேவையை நடத்தி வருகிறார். பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் இந்த சேவையை அவர் வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஸ்மார்ட் போன் யுகத்தில் செயலி மூலம் உணவு டெலிவரி செய்வது என்பது இயல்பாக மாறிவிட்டது.

கிக் எகானமி என சொல்லப்படும் சிறு வேலைகள் சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் உணவு டெலிவரி சேவையை தலைகீழாக வழங்குவதன் மூலம் ஜாஸ்மின், உலகின் தீரா பிரச்னையான பசிக்கு தன்னால் முடிந்த தீர்வை அளித்திருக்கிறார்.

குட்அர் சேவை எப்படி செயல்படுகிறது என்றால், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வீணாகக் கூடிய உணவை பெற்று, தேவைப்படுபவர்களுக்கு அந்த உணவை வழங்கி வருகிறது. இதன் மூலம், உணவு வீணாவது தடுக்கப்படுவதோடு, பசியில் இருப்பவர்கள் வயிறு நிறையவும் வழி செய்யப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!