விண்வெளியில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது?: தலைக்கவசம் வடிவமைத்த இஸ்ரேல்
#technology
#Article
#today
Mugunthan Mugunthan
2 years ago
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க இஸ்ரேலை சேர்ந்த ப்ரெய்ன் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தனித்த தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது.
ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசாவுடன் இணைந்து 4 பேர் கொண்ட குழுவை திங்கட்கிழமை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அணியுள்ள இந்த தலைக்கவசத்தில், EEG எனப்படும் மூளை மின் அலை வரைவை பரிசோதிக்கும் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களின் மூளைத் திறன் மற்றும் செயல்பாட்டை பூமியில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணிக்க உள்ளனர். மனிதர்களின் மூளை திறன் பூமிக்கும், விண்வெளிக்கும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.