சுபகிருது வருஷம் பற்றி சில தகவல்கள்

Prathees
2 years ago
சுபகிருது வருஷம் பற்றி சில தகவல்கள்

வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி சித்திரை 1ஆம் திகதி (14-04-2022) வியாழகிழமை காலை 7.50 மணியளவில் சுபகிருது வருஷம் பிறந்தது. 
 
திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி சித்திரை 1ஆம் திகதி (14-04-2022) வியாழகிழமை காலை 8.41 மணியளவில் சுபகிருது வருஷம் பிறக்கிறது.
 
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புத்தாடை நிறம்
நல்ல சிவப்பு அல்லது மஞ்சள் நிற பட்டாடை அல்லது சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை அணிவது நல்லது.
 
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புத்தாடை நிறம்
மஞ்சள் நிற பட்டு அல்லது மஞ்சள் கரை கொண்ட வெள்ளை வஸ்திரம்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஆபரணம்
பவளம்,புஸ்ப்பராகம் கொண்ட ஆபரணம்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆபரணம்
புஸ்ப்பராகம் கொண்ட ஆபரணம்.

தோஷ நட்சத்திரம்

பரணி, மகம், பூரம் ,உத்தரம் 1ஆம் பாதம் ,பூராடம், உத்தராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம்,திருவோணம்,அவிட்டம் 1ஆம் 2ஆம் பாதம்
 
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட சுப நேரம்
சித்திரை 1ஆம் திகதி (14-04-2022) வியாழக்கிழமை பகல் 7.57 முதல் 8.47 வரை
 
சித்திரை 2 ஆம் திகதி (15- 04-2022) வெள்ளிக்கிழமை பகல் 7.52 முதல் 9.51 வரை
 
சித்திரை 2 ஆம் திகதி (15-04-2022) வெள்ளிக்கிழமை இரவு 6.12 முதல் 8.12 வரை
 
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கைவிஷேட சுப நேரம்
சித்திரை 1ஆம் திகதி (14-04-2022) வியாழகிழமை பகல் 8.50 முதல் 9.42 வரை
சித்திரை 2 ஆம் திகதி (15-04-2022) வெள்ளிக்கிழமை பகல் 8.35 முதல் 9.50 வரை
 
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விஷ_ புண்ணிய காலம்
14-04-2022 அதிகாலை 3.50 மணி முதல் முற்பகல் 11.50 மணி வரை
 
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி விஷ_ புண்ணிய காலம்
14-04-2022 அதிகாலை 4.41 இல் இருந்து பகல் 12.41 வரை
 
மருத்து நீர்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விஷ_ புண்ணிய காலத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கமைய சிரசில் கடப்பம் இலையும் காலில் கொன்றை இலையும் வைத்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி விஷ_ புண்ணிய காலத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கமைய சிரசில் கொன்றை இலையும் காலில் புங்கம் இலையும் வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

மருத்து நீர் தயாரித்தல்

தாழம்பூ, தாமரைபூ,மாதுளம்பூ, துளசி, விஷ்னுகிராந்தி, சீதேவியார், செங்கழுநீர, வில்வம்,அறுகு, பீர்க்கு, பால், கோசலம, கோமயம், கோரோசனை, மஞ்சள, மிழகு, திற்பலி, சுக்கு இவைகளை சுத்த ஜலத்திலிட்டு காச்சிக்கொள்க.

சுபகிருது வருட புத்தாண்டின் இராசிகளுக்கான வரவு மற்றும் செலவு

இராசி               ஆதாயம்                     விரயம்                      பலன்
மேஷம்               14                                     14                           சமசுகம்
ரிஷபம்                8                                     8                              சமசுகம்
மிதுனம்              11                                    5                              லாபம்
கடகம்                11                                    11                            சமசுகம்
சிம்மம்               8                                      14                           நஷ்டம்
கன்னி               11                                      5                             லாபம்
துலாம்               8                                        8                            சமசுகம்
விருச்சிகம்     14                                       14                         சமசுகம்
தனுசு                2                                        8                            நஷ்டம்
மகரம்               5                                       2                             லாபம்
கும்பம்              5                                      2                            லாபம்
மீனம்             2                                        8                             நஷ்டம்
 
சுபகிருது வருஷ பலன்
 
சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அபமாம் விலைகுறையு மான்சாம் - சுபமாகு
நாடெங்கு மாரிமிகு நல்வினை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையிதிற் கேள்
 
இந்த சுபகிருது எனும் வருஷத்தில் பூமியானது பல்வேறு விதமான விழாக்களால் பிரகாசிக்கும் அரசர்களும் கள்வர்களிடமிருந்து ( மக்களுக்கு) அபயமளிப்பவர்களாகவும் சண்டையில் உற்சாகமுடையவர்களாகவும் இருப்பார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!