ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் ட்ரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை
ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்க கூடிய ட்ரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தில் ட்ரோன்கள் பல்வேறு துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்கள் போக்குவரத்திலும் அவற்றை ஈடுபடுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டினை சேர்ந்த நிறுவனம் ஹெக்சா என்ற பெயரில் ஒருவர் அமர்ந்து செல்லக் கூடிய ட்ரோனை உருவாக்கியுள்ளது. இதில் ஆண்டர்சன் கூப்பர் என்ற பத்திரிகையாளர் 6 நிமிட நேரம் வெற்றிகரமாக பறந்தார்.
இந்த ட்ரோனில் பறப்பதற்காக சிமுலேட்டர் முறையில் அரை மணி நேரம் மட்டுமே பயிற்சி எடுத்ததாக பத்திரிகையாளர் ஆண்டர்சன் கூப்பர் தெரிவித்தார். மனிதர்கள் நின்ற இடத்திலிருந்து எழும்பி குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக இறங்க இந்த ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்றும், தரையில் இருந்தவாறே இந்த ட்ரோன்களை இயக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற மனிதர்களை ஏற்றி செல்லும் ட்ரோன் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என இதை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது