கிருமித்தொற்றை தடுக்க நிலவேம்பு உதவுமா ? மருத்துவர்கள் கருத்து

Prasu
2 years ago
கிருமித்தொற்றை தடுக்க நிலவேம்பு உதவுமா ? மருத்துவர்கள் கருத்து

பஞ்ச நிம்பங்களில் ஒன்றான நிலவேம்பு என்ற மூலிகையில் சுரம் குறைக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.

அந்த வேதிப்பொருட்கள் சுரத்தையும் ‘வைரஸ்’ கிருமியினால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும் தன்மையும் கொண்டிருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

முதலில் நிலவேம்புப் பொடியும் நிலவேம்புக் குடிநீரும் ஒன்றல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு என ஒன்பது மூலிகைகள் கலந்துள்ளன.

டெங்கி, பறவைக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பலவகைப்பட்ட சுரங்கள், சுவாச நோய்கள், கைகால் வலி, வீக்கம் உட்பட பல நோய்களுக்கும் தற்போதைய கொரோனா கிருமித் தொற்றுக்கும் சித்த மருத்துவர்களால் நிலவேம்புக் குடிநீர் பரிந்துரைக்கப் படுகிறது.

நிலவேம்புப் பொடியினை மட்டுமே தனித்துக் குடிநீராக்கிப் பருகுவதை விடுத்து, நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை குடிநீராக்கிப் பருகுவதினாலேயே சிறந்த பலன்களைப் பெற முடியும். கர்ப்பிணிகளும் ஒரு வயது நிரம்பாத குழந்தைகளும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இதைத் தவிர்க்க வேண்டும்.

கொரோனா கிருமி ஒரு சளிக்காய்ச்சல் கிருமி.இது நுரையீரலைப் பாதித்து, தும்மல், இருமல், சுவாச அழற்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சுற்றுப்புறத்தில் பலவிதமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவை எல்லாரையும் பாதிப்பது கிடையாது.

சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், ஏற்கெனவே நுரையீரல் நோய்களால் அல்லல்படுவோர் போன்றவர்களையே அதிகம் பாதிக்கிறது.

கொரோனா கிருமியால் அதிகமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதால் நிலவேம்புக் குடிநீர் பயனளிக்காமல் போகலாம். அதற்குப் பதிலாக, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அதிமதுரம் எனும் மூலிகையை உட்கொள்ளலாம்.

அதனைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. அதனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!