ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் -13 சென்னையில் தயாராகிறது
#technology
#Article
#today
Mugunthan Mugunthan
2 years ago

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன் 13-இன் உற்பத்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது.
ஆப்பிளுக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து தரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஐஃபோன் 13ஐ உற்பத்தி செய்து தரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஐஃபோனின் முன்னணி மாடல் ஸ்மார்ட் ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய 3 ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிளின் ஐஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிளின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது



