சீனாவுக்கான சுற்றுலா விசா வழங்காது ஏன்? மத்திய அரசு விளக்கம்
கொரோனா தொற்றின் காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு சுற்றுலா விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்க உரிய நேரம் இன்னும் வரவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
''ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் கொரோனா தொற்று குறித்து இந்தியா தகவல்களை அறிந்து வருகிறது.
சீனாவே இந்தியாவிற்கு இன்னும் விசா வழங்கவில்லை. 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளனர். எனவே, சீனாவுக்கான சுற்றுலா விசா வழங்குவது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல.''என்றார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு, கணிசமாக அதிகரித்துள்ளது. இப்போதும் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றார்.