பொதுவாக நீங்கள் கோடையில காரம் சாப்பிட்டா என்னாகும்?
கோடையில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.காரம், புளிப்பு அடங்கிய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு ஒரு வழி செய்துவிடும்.
எனவே கோடை காலம் முடியும் வரை காரமாக எதையும் சாப்பிடவேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
ஹைபர் அசிடிட்டி
வயிற்றெரிச்சல் என்ற சொல் பழங்காலத்திலிருந்தே உள்ளது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும் பட்சத்தில் இந்த எரிச்சல் அதிகமாகும்.
அமிலச் சுரப்பிகள் அதிக அமிலத்தை சுரப்பதை ஆயுர்வேதம் அதீத பித்த தோஷம் என்கிறது.
அதீத கார சாரமான உணவு, சூடான, கொழுப்பு நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள்.
இனிப்புகள், கலப்பட உணவுகள். இவற்றை உட்கொள்ளுதல் அதிகமாக, டீ, காப்பி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வது போன்றவைகளினால் ஹைபர் அசிடிட்டி ஏற்படுகிறது.
மனஅழுத்தம், டென்ஷன், கோபம் கவலை போன்றவைகளினாலும் அமிலம் சுரக்கிறது. மது பானம், புகைத்தல் போன்ற பழக்கங்களினால் அதிகம் அமிலம் சுரந்து புண்கள் ஏற்படுகின்றன.
சில அலோபதி மருந்துகள் – ஆன்டி – பையாடிக்ஸ், ஸ்டீராய்டு, வலி போக்கும் மருந்துகள் ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்றவைகளினால் அமிலம் சுரக்கிறது.
அதே போல் அடிக்கடி சாப்பிடாமல் விரதம் இருப்பது, வெயிலில் அலைவது போன்றவை களினாலும் ஹைபர் அசிடிட்டி ஏற்படுகிறது.
புளித்த ஏப்பம்
அமிலச் சுரப்பினால் இரைப்பை, குடலில் அல்சர், வாய்புண்கள் ஏற்படுகின்றன. அதே போல் மூலம், பௌத்திரம், வயிற்று தொற்று நோய்களும் ஏற்படுகிறது. உடல் பலவீனமடைகிறது.
மேலும் மார்புப் பகுதியில் மார்பு எலும்பின் கீழே எரிச்சல் கூடியவலி ஏற்படும். பல சமயங்களில் புளித்த ஏப்பம், தவிர உண்ட உணவு மேலேறி வாயில் வருவது போன்றவை ஏற்படும்.
ஒரு புளித்த அமிலம், வாயில் வந்து கரிப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு விலா எலும்புகளில் வலி, ஏற்படும். கிட்டத்தட்ட மார்வலி, மாரடைப்பு போன்ற வலி, அறிகுறிகள் ஏற்படும்.
சமச்சீர் உணவு
அசிடிட்டி வராமல் தடுக்க உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி தவறாமல் உடற்பயிற்சியும், யோகாவும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும். சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.
காலை உணவை தவிர்க்க வேண்டாம் வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக் கொள்ளவும்.
இனிப்பு அமிலத்தை தூண்டும். அதே போல், உப்பு, எண்ணை, ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி, காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள் நல்லது.
பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர் நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடவும்.
தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை – இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும்.
இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.
முட்டைக்கோஸ் ஜூஸ்
முட்டைக்கோஸை அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இதை 2 மாதம் எடுத்துக் கொள்ளவும் அசிடிட்டி பிரச்சினை நீங்கும். அதே போல் சுரைக்காய் ஜுஸ் 2 மேஜைக்கரண்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த சீரகம், தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.