விண்வெளி ஆய்வை முடித்து பூமிக்குத் திரும்பிய இந்திய வம்சாவளி வீரர்

#technology #Article #today
விண்வெளி ஆய்வை முடித்து பூமிக்குத் திரும்பிய இந்திய வம்சாவளி வீரர்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றிருந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீரர், 6 மாதங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பினார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது. ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பயணிக்க நாசாவைச் சேர்ந்த 18 விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் கொண்ட குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரி கமாண்டராக செயல்பட்டு விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்ற இந்தக்குழுவினர், ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஃபுளோரிடாவில் உள்ள விண்வெளி தளத்திற்கு வந்து சேர்ந்தனர். விண்வெளி கமாண்டரான ராஜா சாரி, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.