வாட்ஸ்அப்பில் 'எமோஜி ரியாக்ஷன்' உள்ளிட்ட 3 புதிய அம்சங்கள் அறிமுகம்

#technology #Article #today
வாட்ஸ்அப்பில் 'எமோஜி ரியாக்ஷன்' உள்ளிட்ட 3 புதிய அம்சங்கள் அறிமுகம்

சமூக வலைதளமான பேஸ்புக்கில் உள்ளது போன்று வாட்ஸ்அப்பிலும் எமோஜி ரியாக்ஷன் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உடனடி மெசேஜிங் தளமான வாட்ஸ்அப்பை உலகளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த மூன்று முக்கிய அம்சங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது.

எமோஜி ரியாக்ஷன்ஸ், 2 ஜிபி வரையிலான ஃபைல்களை பகிர்ந்து கொள்வது, குழுவில் 512 பேர் வரையில் சேர்க்கும் வசதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. பயனர்கள் தங்களது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதிகளை பெற முடியும். வாட்ஸ்அப்பில் பகிரப்படும் மெசேஜிற்கு தனியே ரிப்ளை கொடுக்காமல் அதன் கீழே எமோஜிகளின் துணை கொண்டு தங்களது ரியாக்ஷனை வெளிப்படுத்தலாம்.

பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதள செயலிகளில் இதுபோன்ற அம்சம் நீண்ட நாட்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.