பேரக்குழந்தை இல்லாத விரக்தி - மகன் மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்

Nila
2 years ago
பேரக்குழந்தை இல்லாத விரக்தி - மகன் மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்

வட இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகியும் பேரக்குழந்தையைக் கொடுக்காததால் தனது மகன் மற்றும் அவரது மனைவி மீது தம்பதியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

61 மற்றும் 57 வயதான சஞ்சீவ் மற்றும் சாதனா பிரசாத் ஆகியோர் தங்கள் மகனை வளர்ப்பதற்கும், விமானியின் பயிற்சிக்காகவும், ஆடம்பரமான திருமணத்திற்காகவும் தங்கள் சேமிப்பை பயன்படுத்தியதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில், அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தை பிறக்கவில்லை என்றால், சுமார் $650,000 (£525,000) மதிப்பிலான இழப்பீடு கோருகின்றனர்.

மிகவும் அசாதாரணமான இந்த வழக்கு மனரீதியான துன்புறுத்தல் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.

பிரசாத், 2006ம் ஆண்டு $65,000 செலவில் பைலட் பயிற்சிக்காக அமெரிக்காவிற்கு தனது மகனுக்காக தனது சேமிப்பு முழுவதையும் செலவிட்டதாகக் கூறினார்.

அவர் 2007 இல் இந்தியாவுக்குத் திரும்பினார், ஆனால் அவரது வேலையை இழந்தார், அவரது குடும்பத்தினர் அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிதி உதவி செய்ய வேண்டியிருந்தது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

35 வயதான ஷ்ரே சாகர் இறுதியில் விமானியாக வேலை பெற்றார். தற்போது 31 வயதாகும் ஷுபாங்கி சின்ஹாவுடன் 2016 ஆம் ஆண்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு, $80,000 மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் வெளிநாட்டில் தேனிலவுக்கு பணம் கொடுத்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

என் மகனுக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது ஆனால் அவர்கள் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று திரு பிரசாத் கூறினார். குறைந்த பட்சம் நேரத்தை செலவிட ஒரு பேரக்குழந்தை இருந்தால், எங்கள் வலி தாங்கக்கூடியதாக மாறும்.

தம்பதியின் சட்டத்தரணி ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தி நேஷனல் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், மனக் கொடுமையின் காரணமாக தம்பதியினர் பணத்தைக் கேட்டதாகக் கூறினார்.

தாத்தா, பாட்டி ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. தாத்தா பாட்டி ஆக வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தார்கள்.

ஹரித்வாரில் தாக்கல் செய்யப்பட்ட தம்பதியின் மனு, மே 17ம் திகதி நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.