சீனி ஏற்றுமதியை கட்டுப்படுத்த இந்தியா திட்டம் ! பல நாடுகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Nila
2 years ago
சீனி ஏற்றுமதியை கட்டுப்படுத்த இந்தியா திட்டம் ! பல நாடுகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

கோதுமையைத் தொடர்ந்து சீனி ஏற்றுமதியையும் கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு விலை அதிகரிப்பைத் தடுப்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளார்.

இந்தியா 10 மில்லியன் தொன் சீனி ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறது. இதற்கு முன்னர் ஏற்றுமதிகளை 8 மில்லியன் தொன்னுக்கு கட்டுப்படுத்த அந்நாடு எண்ணியது.

இருப்பினும் உள்நாட்டில் கூடுதல் சீனி உற்பத்தி செய்யப்படும் என்று கணிக்கப்பட்டதால் உலக நாடுகளுக்குச் சற்று அதிகமான சீனி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு 6 மில்லியன் தொன் சீனி இருக்கும். அது நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது என்று கூறப்பட்டது.

உலகின் மிகப்பெரிய சீனி உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சீனி ஏற்றுமதி நாடாகவும் அது உள்ளது.

இந்தியாவின் இந்த அதிரடி தீர்மானத்தால், இந்தியாவிடமிருந்து சீனியை இறக்குமதி செய்ய காத்திருக்கும் நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.