மும்பை போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு

#India #drugs
Prasu
2 years ago
மும்பை போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்ததாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6,000 பக்கங்களை தாக்கல் செய்துள்ளது.

இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் 5 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இன்று விடுவித்தது.

போதிய ஆதாரம் இல்லாததால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

ஆர்யன் கானை கைது செய்த முதல் அதிகாரிகள் குழு முக்கியமான எந்த விதிமுறைகளையும் சரியாக பின்பற்றவில்லை என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் கட்டாய மருத்துவப் பரிசோதனை, ரெய்டுகளின் வீடியோ பதிவு மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துதல் போன்ற எதுவும் கிடைக்கவில்லை என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து என்சிபி டைரக்டர் ஜெனரல் பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாட்ஸ்ஆப் உரையாடல், கோர்ட்டில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான உடல் உறுதியான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!