கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவிடம் வேண்டுகோள்!
Prabha Praneetha
2 years ago
கோதுமையின் ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவிடம் சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டி இந்தியா எடுத்த இந்த முடிவை பாராட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.