இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனம்
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கடந்த 1995-ஆம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகம் செய்யப்பட்டது. இது அறிமுகமான பிறகு பல முக்கிய வங்கிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் மக்களின் முதல் பிரவுசிங் தேர்வாக இருந்தது.
கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில் கூகுள் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், மொசில்லா பயர்பாக்ஸ் போன்றவற்றின் பயன்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை வருகிற புதன்கிழமை முதல் நிறுத்த இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எட்ஜ் பிரவுசரின் உள்கட்டமைப்பில் இருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடிப்படைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.