ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 5வது நாளாக மீட்கும் பணி தீவிரம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சத்தீஸ்கர் ஜாங்கிரி - ஷம்பா மாவட்ட ஆட்சியர் ஜான்ஜ்கிர், ஜிதேந்திர சுக்லா கூறுகையில், "முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். மீட்பு பணி 80 மணி நேரமாக நடந்து வருகிறது. ஆனால் மிக விரைவில் ராகுலை மீட்க முடியும். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. முதல்வர் பூபேஷ் பாகேல் வீடியோ மூலம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்," என்று கூறினார்.