தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதும், 28 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் 12ஆம் வகுப்பில் 93.76 சதவீதமும், 10ஆம் வகுப்பில் 90.07 சதவீதமும் மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி அடைந்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 97.22 சதவீத தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்தது. 12ஆம் வகுப்பு தேர்வில் 97.95 சதவீத தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது.
இந்த நிலையில் 10 மட்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த விரக்தியில், ஒரே நாளில் தமிழகத்தில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க கல்வித்துறை பரிசீலனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.