கடன் வசதிக்கான வாக்குறுதியை வழங்காத இந்தியா:உணவு மற்றும் எரிபொருளை பெறுவதில் சிக்கல்

Prabha Praneetha
2 years ago
கடன் வசதிக்கான வாக்குறுதியை வழங்காத இந்தியா:உணவு மற்றும் எரிபொருளை பெறுவதில் சிக்கல்

எரிபொருள் மற்றும் அத்தியவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் வாக்குறுதியளிப்பதில்லை என இந்திய பிரதிநிதிகள், இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் போது அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவின் கடன் வசதியின் கீழ் ஆயிரம் மில்லியன் டொலர்களையும் எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் இந்திய பிரதிநிதிகள், கடன் வசதிகளை வழங்குவதை விட வழங்கிய கடனை திரும்ப பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பில் இந்திய நிதிச் சபை வரையறை விதித்திருப்பது மற்றும் கடன் வழங்கும் வரையறையை மீறி கடன் வழங்கி இருப்பது என்பன இதற்கு காரணம்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்திய பிரதிநிதிகள் குழுவினர் இந்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை வழங்க உள்ளனர்.