கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி!
#Health
#BLOOD
Mugunthan Mugunthan
2 years ago
எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்கிறோம். இயற்கையே பலவித மருந்துகளை அள்ளி கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது தேன் மற்றும் லவங்கப்பட்டை. இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம்...
- மூட்டு வலி பிரச்னைக்கு ஒரு பங்கு தேன், இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீர், இதில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடி கலந்து பேஸ்ட் போல் குழைத்து வலியிருக்கும் இடத்தில் மெதுவாகத் தேய்த்து விடவும். ஓரிரு நிமிடங்களிலேயே வலி குறையும். தினமும் காலை, இரவு 1 கப் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி கலந்து தொடர்ந்து பருகினால் மூட்டுவலி குணமாகும்.
- 5 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து பல் வலியுள்ள இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவினால் குணம் தெரியும்.
- 16 அவுன்ஸ் டீ டிகாக்ஷனில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியை கலந்து பருகினால், ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும்.
- 1 டேபிள் ஸ்பூன் தேனை (லேசாக சூடுபடுத்தி) கால் டீஸ்பூன் பட்டைப் பொடியுடன் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், ஜலதோஷம் குணமாகும்.
- தினமும் பல் தேய்த்த பிறகு காபி குடிப்பதற்கு முன் 1 டம்ளர் நீரில் அரை டேபிள் ஸ்பூன் தேன் விட்டுக் கலக்கி ஒரு சிட்டிகை பட்டைப்பொடி தூவி பருகினால், நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருக்கும்.
- தேனையும், பட்டைப் பொடியையும் சம பாகமாக எடுத்து குழைத்து மருக்களின் மீது தடவி வந்தால் சில நாட்களில் பலன் தெரியும்.
- காலை எழுந்தவுடன், இரவு படுக்கும் முன் வெறும் வயிற்றில் ஒரு கப் நீரில் தேன், பட்டைப் பொடி சம பங்காகக் கலந்து கொதிக்க விட்டு பருகினால், எடை குறைந்து, உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
- தேன் மற்றும் பட்டைப் பொடியை குழைத்து ப்ரெட் மற்றும் சப்பாத்தியில் தடவி சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடுக்கும்.
- தினமும் காலையில் வெந்நீரில் 1 ஸ்பூன் தேன்+பட்டைப் பொடி கலந்து வாய் கொப்பளிக்க வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.