பெண் குழந்தையினால் தந்தையின் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவு பற்றி தெரிந்துகொள்வோம்!

Nila
1 year ago
பெண் குழந்தையினால்  தந்தையின் ஆயுள் அதிகரிக்குமா?  ஆய்வு முடிவு பற்றி தெரிந்துகொள்வோம்!

குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. தந்தையின் ஆயுளுக்கும், பெண் குழந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு பந்தம் இருப்பதாக கீலோனியன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. 

குடும்பத்தில் பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கு 4310 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2162 பேர் தந்தையர். ஆய்வின் முடிவில் மகன்களின் எண்ணிக்கைக்கும், தந்தையின் ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

அதேவேளையில் மகள் இருந்தால் தந்தையின் ஆயுள் 74 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், எத்தனை மகள்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆயுள் காலம் மாறுபடும் என்றும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் விஷயத்தில் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது. 

ஒவ்வொரு பிரசவத்தின்போதும் தாயின் ஆரோக்

கியமும், ஆயுட்காலமும் குறைகிறது. அதேவேளையில் தனியாக வாழும் பெண்களுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குழந்தை இல்லாத தம்பதியரை விட குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதியர் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு