119 கோடிக்கு வீடு வாங்கிய ஹிந்தி நட்சத்திர தம்பதி

#Cinema #Actor #Actress
Prasu
2 years ago
119 கோடிக்கு வீடு வாங்கிய ஹிந்தி நட்சத்திர தம்பதி

நட்சத்திர தம்பிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியினர் ரூ.119 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹிந்தி நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்திய அணி உலக கோப்பை வென்ற 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட 83 படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாகவும், தீபிகா அவரது மனைவியாகவும் நடித்து அசத்தினர்.

இந்த நிலையில் இருவரும் ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

மும்பை பந்தரா பகுதியில் உள்ள சாகர் சேகம் அடுக்குமாடி குடியிருப்பில் 16,17,18,19 ஆகிய தளங்களை ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியினர் வாங்கியிருக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் நடிகர் ஷாருக்கானின் வீடும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பும் அமைந்துள்ளதாம்.

கடற்கரையைப் பார்த்து அவர்கள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது 11,266 சதுர அடி அளவுக்கான இடத்தையும், 1,300 சதுர அடி அளவுள்ள மொட்டை மாடியையும் வாங்கியுள்ளனர். அந்தப் பகுததியில் ஒரு சதுர அடி ரூ.1 லட்சம் அளவுக்கு விலை போகிறதாம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!