குக் வித் கோமாளி 3 வைல்டு கார்டு ரிசல்ட் இதோ.. பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் போட்டியாளர்கள்!
#India
#Cooking
Kobi
2 years ago
இரசிகர்களின் ஆதரவோடு விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே நான்கு போட்டியாளர்கள் பைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில் இன்று வைல்டு கார்டு ரவுண்டு நடைபெற்றது.
அந்த வகையில் அதன் கடைசி கட்ட போட்டியில் சந்தோஷ், முத்துக்குமார் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டி முடிந்து அவர்கள் செய்த டிஷ்களை டேஸ்ட் பார்த்த நடுவர்கள் மூன்று பேரையும் பாராட்டினார்கள்.
வைல்டு கார்டு ரவுண்டில் வெற்றி பெற்று சந்தோஷ் தான் பைனலுக்கு செல்கிறார் என நடுவர்கள் முதலில் அறிவிக்க எல்லோரும் கொண்டாடினார்கள்.
ஆனால் அதன் பின் கிரேஸ் கருணாஸும் பைனலுக்கு செல்கிறார் என அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் நடுவர்கள்.