ஷுட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தை துவக்கிய வாரிசு டீம்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு'படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'வாரிசு' படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதால் இந்த படத்திற்கு மற்ற விஜய் படங்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தில் இன்னும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மீதமிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஓடிடி ரிலீஸ் உரிமை 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என்றும், அதேபோன்று சாட்டிலைட் உரிமையை ரூ 65 கோடி வியாபாரம் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது தவிர இந்தி உரிமை தனி வியாபாரம் நடைபெற்று வருகிறதாம்.