மீண்டும் திரையில் கவுண்டமணி
#TamilCinema
#Cinema
Kobi
2 years ago
தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ‘வாய்மை’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.
தனக்கு வரும் பெரும்பாலான பட வாய்ப்புகளை கவுண்டமணி மறுத்து வருகிறார், அவரது கிண்டலான கேரெக்டரை, மீண்டும் திரையில் காண தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் சிவாவின் பெரியப்பாவாக நடிப்பார் என்றும், படம் முழுவதும் அவருடன் தோன்றுவார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.