கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது

Kanimoli
2 years ago
 கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது

  தமிழகத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் கடலூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் 17 வயது ஸ்ரீமதி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 13ம் திகதி மாணவி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் . மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்ல், அது கலவரமாக வெடித்தது.

பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், எனினும் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ரீமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி எழுதியிருந்ததுடன், அம்மா, அப்பா, சந்தோஷ், துர்கா உள்ளிட்ட சில பெயர்களை எழுதியதுடன் என்னை மன்னித்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மாணவியின் மரணம் தமிழத்தையே உலுக்கியுள்ள நிலையில் இந்த கடிதம் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!