கமல்ஹாசனுடன் கூட்டணி போடும் ரஜினிகாந்த்..
உலக நாயகன் கமலஹாசனின் திரைப்படம் விக்ரம் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை கமல் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார்.
இந்த படத்தில் இயக்குனர்கள் நடித்த நடிகர்களுக்கு பலவிதமான பரிசு பொருட்களை அளித்து வந்தார், அடுத்ததாக பல படங்களை தொடங்குகிறார் கமல்ஹாசன்.
இந்தியன் 2, தேவர் மகன் 2, ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் மற்றும் விக்ரம் 2 போன்ற படங்களில் நடிக்க உள்ளார். கமல் இவ்வளவு சுறுசுறுப்பாக இருந்து நிறைய வருடங்கள் ஆகிறது.
பழைய கமலை இப்பொழுது பார்க்க முடிகிறது, இவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பல படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக அதில் கமல் அதிகமாக நடிப்பார்.
இனிமேல் கமலஹாசன் பொருளாதார ரீதியாக வெற்றி பெற ராஜ் கமல் பிலிம்ஸ் முக்கிய நடிகர்களை வைத்து படம் எடுக்க உள்ளார் என்று செய்திகள் வந்தன.
அதன் வரிசையில் விஜய், சூர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் முடிவு செய்யப்பட்டது.
இப்போது சிவகார்த்திகேயன் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்து யார் என்று பேசிக்கொண்டிருக்கையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் யாரும் எதிர்பார்க்காத ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளன.
நண்பர் ரஜினிகாந்துக்கு எப்படியாவது ஒரு படம் தயாரித்து விட வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே கமலுக்கு இருந்துதான் வந்தது.
அதனை கருத்தில் கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளனர்.
எனக்கு எப்படி 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது படமாக விக்ரம் அமைந்ததோ அதே போல் ரஜினிகாந்துக்கு ஒரு படத்தை தயாரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டணி அமைய உள்ளதாம். இதற்கான முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறதாம்.