மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் சூர்யா

#TamilCinema #Cinema
Kobi
2 years ago
மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் சூர்யா

நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.ராஷ்மிகா முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த விஜய்யின் பிறந்தநாளில் வெளிவந்த இப்படத்தின் First லுக் போஸ்டர் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் இயக்குனரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா.

ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் வேறொரு தெலுங்கு நடிகர் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், தற்போது சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்பதால், அவருக்கு பதிலாக எஸ்.ஜே. சூர்யா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யா விஜய்யை வைத்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த குஷி படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!