விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியிடம் ரூ.25 கோடி கேட்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்

Prasu
2 years ago
விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியிடம்  ரூ.25 கோடி கேட்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்

விதியை மீறி செயல்பட்டதால் விக்னேஷ் சிவன் - நயன்தாராவிடம் ரூ.25 கோடியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திரும்ப கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் கடந்த மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இருவரது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் திருமண ஏற்பாடுகளை அந்நிறுவனமே செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண விடியோ வெளியாகவில்லை. தங்கள் அனுமதியை மீறி திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டதால் நெட்ஃபிளிக்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரிடமும் ரூ.25 கோடியைத் திரும்ப கேட்டு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

இந்தத் தகவல் குறித்த உண்மை தன்மை என்னவென்று இருவரும் பதில் அளித்தால் மட்டுமே தெரியவரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!