ஐந்து மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் தி லெஜண்ட்

#TamilCinema
Prasu
2 years ago
ஐந்து மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் தி லெஜண்ட்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் ஐந்து மொழிகளில் 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம் மற்றும் உலகமெங்கும் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்துள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!