தவறான விநியோக நடைமுறைகள் காரணமாக தேவையானவர்கள் எரிபொருள் பெற முடியவில்லை - காரணம் என்ன?
#SriLanka
#Fuel
Prasu
2 years ago
- இரண்டு நாட்களுக்கு முன்னரே வாகனங்களை் அடுக்குதல்
- போக்குவரத்து பாதைகளை அடைத்தல்
- வியாபார நிலையங்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல்
- குடியிருப்பாளர்களுக்கு இடையூறு செய்தல்.வீடு செல்லும் வழிகளை அடைத்தல்
- முதல் நாள் புதுசு புதுசா செருகுதல்
- வாகனங்களுக்கான பாதுகாப்பு இன்மை
- மனித மணித்தியாலங்கள் வீணடிப்பு
- QR கோட் பாவிக்காமல் எரிபொருள் அனுமதித்தல்
- தெரிந்தவர்களுக்கு full tank அடித்தல்
- பொலிசார் தங்கள் வாகனம் என்று அடித்து கொடுத்தல்
- எரிபொருள் நிலைய ஊழியர்கள் தங்கள் வாகனம் என்று அடித்து கொடுத்தல்
- ஒரு சில பாடசாலைகளுக்கு நிறுவனங்களுக்கு வழங்கி பாரபட்சம் காட்டுதல்
- கயிறுகட்டி கல்லு வைத்து ஓலை வச்சு குறுக. க. வாகனம் வட்னு இடம் பிடித்தல் பிறகு இடம் விற்றல் மாற்றுதல்
என பல விசர்க்கூத்துகள் நடை பெறுகின்றன
- எரிபொருள் நிலையங்கள் விநியோகங்கள் அதிகரிக்கப்பட்டும் இப்படி ஏகப்பட்ட முறைகேடுகள் தவறுகளுடன் யாழ்மாவட்டத்தில். எரிபொருள் விநியோகம் சீரடையாமல் இருக்கிறது
- இருவாரங்களுக்கு முன் காட் பாவித்து இலகுவாக அடிக்க கூடியதாக இருந்தது ஆனால் இப்போது படு கேவலமாக உள்ளது இது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்களால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வரக்கூடிய விடயம்
ஏன் அவர்கள் அமைதியாகவுள்ளனர் ?
- கிழக்கு மாகாணத்தில் வாகனங்கள் எரிபொருள் நலையங்கள் முன் அடுக்குவதற்கு பொலிஸ் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன் இன்னும் வடக்கில் இது தொடர்கின்றது என தெரியவில்லை .
வடக்கில் பொலிஸ் பொறுப்பதிகாரி இல்லையா ? என்ன செய்து கொண்டிருக்கிறார் ?
- அரச அதிகாரிகள் காட் மூலம் பங்கீடு செய்யவும் அனுமதிக்கவில்லை QR மூலம் சிறப்பாக வழங்கவும் ஒழுங்கில்லை . மக்களும் பெற்றோல் போதையால் அலைகின்றனர் இதற்கு முடிவு கட்டாத வரை முன்னேற வாய்ப்பில்லை



