இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவல் இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும்

Kanimoli
2 years ago
இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவல் இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும்

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலை தீவிர கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் உளவுக் கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவல் என வைகோ விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் யுவான் வாங் - 5 உளவுக் கப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளமை கடும் கண்டனத்திற்கு உரியது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

சீனா உளவு பார்க்காமல் இருக்கவும், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு, இலங்கை அரசாங்கத்தை கப்பல் விடயத்தில் இந்தியா எச்சரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயல்களை இந்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் உடனடியாக இந்தியா தீவிர கவனம் செலுத்தி சீனக் கப்பல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வைகோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.