38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்

Prasu
2 years ago
38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்

இந்திய ராணுவத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சியாச்சினியில் 16 ஆயிரம் அடி உயரத்தில் பணியாற்றி வந்தார். 

அப்போது பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த பகுதியை மீட்கும் பணியான “ஆபரேஷன் மேக்தூத்” சந்திரசேகர் அங்கம் வகித்தார். அந்த குழுவில் ஈடுபட்ட அனைவரும் சியாச்சினியில் பனி பிரதேசத்தில் பணியாற்றி வந்தனர். 

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட பனி சரிவில் சிக்கி 18 வீரர்கள் பலியாகினர். இதில் சந்திரசேகர் இறந்தார். இதில் 14 பேரரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்ற வந்தது.

இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பனி சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்கு பிறகு சியாச்சினில் உள்ள பழைய பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

அந்த உடல் சந்திரசேகர் என்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட வீரரின் உடல் முழு ராணுவம் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே பகுதியில் மற்றொரு வீரரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!