இந்தியாவில் பிரபல சாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்ப்டுத்தியிருந்த நிலையில் அவரது மரணம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்தியாவில் பிரபல சாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்ப்டுத்தியிருந்த நிலையில் அவரது மரணம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் நெகிலஹலா என்ற லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியான பசவ சித்தலிங்கா நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் அவரது, அறையில் இருந்து தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது மரணத்திற்கு நானே பொறுப்பு. எனது மரணம் தொடர்பாக யாரிடமும் விசாரிக்க வேண்டாம். இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை.
அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். மடத்தின் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் மடத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று உருக்கமாக எழுதி இருந்தார்.
பரபரப்பு மடாதிபதியின் தற்கொலை குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் தன்னை பற்றி 2 பெண்கள் செல்போனில் பேசிய ஓடியோ வைரல் ஆனதால் தனது பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டதாக கருதி சாமியார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் இரு பெண்கள் பல மடாதிபதிகள் மீது புகார்களை தெரிவிக்கும் ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உயிரிழந்த சித்தலிங்கா சாமியார் பெயரும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.