ஆட்டோவில் சென்ற கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற ஆட்டோ டிரைவரை கைது செய்த பொலிசார்

Kanimoli
1 year ago
ஆட்டோவில் சென்ற கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற ஆட்டோ டிரைவரை கைது செய்த பொலிசார்

சென்னையில் ஆட்டோவில் சென்ற கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற ஆட்டோ டிரைவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இஷிதா சிங் என்ற பெண் தனது நண்பருடன் நகர ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தாக தெரியவந்துள்ளது.

செம்மஞ்சேரியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஹோட்டலுக்கு ஆட்டோ சவாரிக்கு முன்பதிவு செய்ததாக கூறினார்.

அவளும் அவளுடைய தோழியும் இலக்கை அடையும் போது ஆட்டோவில் இருந்து இறங்கியபோது, ​​டிரைவர் தகாத முறையில் அவளைத் தொட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.


"ஈஸ்ட் கோஸ்ட் மெட்ராஸிலிருந்து நானும் எனது நண்பரும் ஹோட்டலுக்குத் திரும்பியபோது, ​​ஐபிஸ் ஓஎம்ஆர் ஹோட்டலுக்கு அருகில், செல்வம் என்ற உபெர் ஆட்டோ ஓட்டுநர்  என்னை  பாலியல்  ரீதியாக சீண்டியதாகவும் அப்போது அதிர்ச்சியடைந்த நான் சத்தமாக கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தோம்.

ஆட்டோ ஒட்டுநர் தப்பிக்க முயன்ற போது நானும் எனது தோழியும் அவரை பிடிக்க முயன்றோம்.ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார் என பதிவிட்டுள்ள மாணவி,   புகார் கொடுக்க பொலிசாரை தொடர்பு கொண்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோரை ட்விட்டர் பக்கத்த்தில்டேக் செய்துள்ளார்.

30 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பொலிஸ்காரர் மற்றொரு ஆணுடன் ஹோட்டலை அடைந்தார், ஆனால் பெண் பொலிஸ் இல்லை என்றும்  அவர் கூறினார். "ஸ்டேஷனில் பெண் அதிகாரி இல்லாததால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காலை வரை காத்திருக்குமாறு அவர் எங்களைக் கேட்டார். "இது அரசாங்கத்தின் உத்தரவு" என்று அவர் கூறினார்,  

 அதோடு புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது காவல் நிலையத்திற்குள் தன்னை அனுமதிக்கவில்லை, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி  தனது ஆட்டோ பயணத்தின் ஸ்கிரீன்கிராப்களுடன் தானும் அவரது நண்பரும் பயணித்த ஆட்டோவின் புகைப்படங்களையும் வெளியிட்டார். அவர் தனது சவாரி பரிவர்த்தனை விவரங்களையும் டிரைவரின் பெயரையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் ட்விட்டர் பதிலுக்கு பதிலளித்த தாம்பரம் காவல் ஆணையர், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு ஆட்டோ டிரைவர் பிடிபட்டதாகவும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.